Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்





ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ
لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ 
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று. அவன் நோன்பு திறக்கும் போது. மற்றது அவன் தனது “றப்பு” அல்லாஹ்வைச் சந்திக்கும் போது என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
“நோன்பு” என்ற வணக்கம் செய்தவன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பான் – தரிசிப்பான் – அந்நேரம் அவன் மகிழ்ச்சி அடைவான். இந்த மகிழ்ச்சி அளவற்றது. வர்ணிக்க முடியாதது. ஓர் அடியானுக்கு அல்லாஹ்வை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவனுக்கேற்படும் மகிழ்ச்சியை யாரால்தான் வர்ணிக்க முடியும். ஏனெனில் அது பேரின்பம். சிற்றின்பம் அல்ல.
அவன் மறுமையில் அல்லாஹ்வை எவ்வாறு தரிசிப்பான்? ஏதேனும் உருவத்தில் – வடிவத்தில் – தரிசிப்பானா? அல்லது உருவமின்றி தரிசிப்பானா? என்பது தொடர்பாக இங்கு விளக்கம் எழுத நான் விரும்ப வில்லை. தரிசிப்பான் என்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
இது தொடர்பாக விளக்கம் தேவையானோர் இறையியற் கலையில் ஆழமான அறிவுள்ள மகான்களைச் சந்திக்க வேண்டும். செல்லாக்காசுகள்
போன்றவர்களைச் சந்தித்து தவறான விளக்கம் பெற்றுக் கொள்ளக் கூடாது.
நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரம் ஏற்படும் மகிழ்ச்சி என்ன? எதனால்? என்பதற்கு அரை குறைகள் ஒரு விளக்கமும், நிறைவுள்ளோர் இன்னொரு விளக்கமும் சொல்கிறார்கள்.
அரை குறைகள் சொல்லும் விளக்கம் என்னவெனில், நோன்பு நோற்றவன் அதை திறப்பதற்கு ஆயத்தமாகும் போது அவனுக்கு முன்னால் கோழிக்கஞ்சி, பெட்டிஸ், கட்லிஸ், பேரீத்தம்பழம், தெம்பிலி முதலானவையும், இன்னும் இவையல்லாத பல்வகை உணவுகளும், இனிப்புப் பண்டங்களும் வைக்கப்படுகின்றன. அன்று பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலுமிருந்த நோன்பாளி இவற்றைக் காணும் போது மகிழ்ச்சி ஏற்படாமல் இருக்குமா? இந்த மகிழ்ச்சியை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள்
என்று குறை குடங்கள் கூறுகின்றன.
குறை குடங்கள் கூறும் விளக்கத்திற்கும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்துக்கும்
வெகுதூரம். குறை குடங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களை தம்போன்ற குறை குடமாக கணித்ததே அவர்கள் மேற்கண்டவாறு கூறுவதற்கு காரணமாகும். குறை குடங்களின் இலட்சியம் பெருமானாரைக் குறை குடமாகப் படம் பிடித்து மக்களுக்கு காட்டுவதேயாகும்.
“நப்ஸ்” என்ற மனவெழுச்சிற்கு – மன ஆசைக்கு – ஒரு மனிதன் அடிமையாகி, அது கேட்டதையெல்லாம்
கொடுத்து அதை சக்தியுள்ள மிருகமாக ஆக்கி விடாமல் அதற்கு மாறு செய்து அதன் சக்தியை குறைத்து அதைப் பலம் குறைந்ததாக ஆக்க வேண்டும் என்ற இலட்சியம் உள்ள நபீ பெருமானார் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நப்ஸ்” என்ற மன ஆசைக்கு ஏற்படும் மகிழ்ச்சியை நோன்பாளிக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்று சொல்வார்களா?
“நப்ஸ்” என்ற பேய்க்கு அது விருப்புகின்றவற்றையெல்லாம் கொடுக்கும் போது அது இன்னும் பலம் பெற்று அவனை – நப்ஸ் உடயவனை – கொன்று விடவும் சாத்திய முண்டு.

***************************

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு – (2020ம் ஆண்டுப் பதிவு)

لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ
صحيح مسلم 1151 – 164

மேற்கண்ட ஹதீதில் நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளதாக நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். இதன் கருத்து நோன்பாளிக்கு இரண்டு சமயத்தின்போது மகிழ்ச்சி உண்டு என்பதாகும்.

ஒன்று: நோன்பு திறக்கும் நேரம் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இந்த மகிழ்ச்சி “றூஹானிய்யத்” ஆன்மீக மகிழ்ச்சியா? அல்லது “நப்ஸானிய்யத்” சிற்றின்ப, மனவெழுச்சி தொடர்பான மகிழ்ச்சியா?

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “நப்ஸ்” என்ற மனவெழுச்சி தொடர்பான மகிழ்ச்சியைப் புகழ்ந்து பேசியிருக்கமாட்டார்கள். ஏனெனில் “நப்ஸ்” என்ற மனவெழுச்சிக்கு மாறு செய்து நடக்குமாறு திருக்குர்ஆன் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பெருமானார் அதைப் புகழ்ந்து பேசியிருக்க வாய்ப்பே இல்லை.

அல்லாஹ் திருக்குர்ஆனின் பல இடங்களில் “நப்ஸ்” என்ற மனவெழுச்சி தொடர்பாக இழித்தரைத்துள்ளான். إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ “நப்ஸ்” என்பது தீமையை அதிகம் ஏவக் கூடியதென்று ஓர் இடத்திலும் (12-53), قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا “நப்ஸ்”ஐ சுத்தம் செய்தவன் வெற்றி பெற்றுவிட்டான். அதை மாசுபடுத்தியவன் தோல்வி அடைந்து விட்டான் என்று இன்னோர் இடத்திலும் (91-9,10) கூறியுள்ளான்.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், أَعْدَى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ உனது விரோதிகளில் – எதிரிகளில் கடுமையான மிகப் பெரிய எதிரி உனது இரண்டு விலாக்களுக்கும் இடையிலுள்ள “நப்ஸ்”தான் என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வும், நபீகள் நாயகமும் மேற்கண்டவாறு “நப்ஸ்” என்ற எதிரியை எச்சரித்திருக்கும் நிலையில் அதற்கேற்படுகின்ற மகிழ்ச்சி பற்றிப் புகழ்ந்து கூறியிருப்பதற்கு சாத்தியமே இல்லை.

எதார்த்தம் இவ்வாறிருக்கும் நிலையில் “நப்ஸ்” என்ற எதிரியை வெல்லும் கலையான علم التصوّف “ஸூபிஸம்” தெரியாத சில வானொலிப் பேச்சாளர்கள் பின்வருமாறு விளக்கம் கொடுப்பதைக் கேட்பவர்கள் மூலம் அறியும் போது சிரிப்புடன் அழுகையும் வருகிறது.

நோன்பு திறக்கும் நேரம் பல்சுவைக் கஞ்சி, பல்சுவை பெட்டிஸ், கட்லிஸ், றோல், நாலு கால், இரண்டு கால் பிராணிகளின் சூப், வெளிநாட்டு “அஜ்வா” பேரீத்தம்பழம், தெம்பிலி, முட்டைக் கட்லிஸ், ஈரல் றோல் போன்றவை முன்னால் இருக்கும் நிலையில் “ஸுப்ஹ்” நேரத்திலிருந்து பசி, தாகத்தோடு வாடி வதங்கிப் போயிருக்கும் நோன்பாளிக்கு மகிழ்ச்சி வராமலிருக்குமா? என்று கேட்கும் “தாயீ” களை நினைத்து பிற மதத்தவர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் நாணித் தலைகுனிய வேண்டியதாக உள்ளது.

நபீகள் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “நப்ஸ்” என்ற நச்சுப் பாம்பை கொல்ல வந்தவர்களாகவும், அதைப் பட்டினி போட்டு வெல்ல வந்தவர்களாகவும் இருக்கும் நிலையில் “ஸூபிஸம்” தெரியாமல் “தஃவா” பணி செய்பவர்கள் மிகவும் நிதானமாகப் பேச வேண்டும். மக்களை நல்வழிப்படுத்துவோர் முதலில் நல்வழியை தாம் அறிந்திருக்க வேண்டும். முஸ்லிம் நிகழ்ச்சி ஒலிபரப்புக்குப் பொறுப்பானவர்கள் பேச வருவோரை முதிரை மரமா? முருங்கை மரமா? என்று ஒரு விரலினாலாவது தெறித்துப் பார்த்து ஒலிவாங்கிக்கு முன் நிறுத்த வேண்டும்.

நோன்பு திறக்கும் நேரம் நோன்பாளிக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சி என்னவெனில் அன்று அவன் நோற்ற நோன்பு நோயாலோ, அல்லது வேறு காரணத்தாலோ முறிந்துவிடாமல் அதைப் பாதுகாத்த அல்லாஹ்வின் கருணையை நினைத்து அவனுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியாகும். “தாயீ” சொல்லும் மகிழ்ச்சி அல்ல.

நோன்பாளிக்குள்ள இரண்டாவது மகிழ்ச்சி فرحة عند لقاء ربه அவன் மறுமையில் தனது இரட்சகனைச் சந்திக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியாகும். அல்லாஹ்வைச் சந்திக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி நோன்பாளிக்கு மட்டுமுள்ள ஒன்றல்ல. அல்லாஹ்வைச் சந்திக்கின்ற அனைவருக்கும் அந்த மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். எனினும் அது ஒரு விஷேட சந்திப்பாக இருக்கும். அல்லாஹ்வை விசுவாசிகள் மறுமையில் சந்திப்பார்கள் என்பது திருக்குர்ஆனின் ஆதாரம், ஹதீதுகளின் ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்ட விஷயமாகும்.

மறுமையில் அவனின் “தஜல்லீ” விசுவாசிகள் அனைவருக்கும் கிடைத்தாலும் கூட அனைவருக்கும் ஒரேமாதிரியான காட்சி கிடைக்காது. அவர்களில் ஒவ்வொருவரினது ஆன்மீகத் தரத்திற்கேற்றவாறே காட்சிகளும் கிடைக்கும்.

வணக்கங்களில் நோன்பு என்ற வணக்கம் மிகக் கஷ்டமானதும், மிக விஷேடமானதுமாகும். ஏனெனில் ஏனைய எந்த ஒரு வணக்கத்திலும் இல்லாத சிறப்பம்சம் பசித்திருப்பதேயாகும். இதுவே நோன்பு நோற்பதிலுள்ள அதி விஷேஷமாகும். பசியின் மூலம் இறைஞானம் ஏற்படும்.

இன்று பொது மக்களில் அதிகமானவர்கள் நோற்கின்ற நோன்பிற்கும், நோன்பின் இலட்சியத்திற்கும் சம்பந்தமே இல்லை எனலாம். ஏனெனில் ஒரு மனிதன் சாதாரண நாட்களில் சாப்பிடுவதை விட நோன்பாளி அதிகமாகவே சாப்பிடுகிறான். அதேபோல் அதிகமாகவே குடிக்கிறான். அளந்து பார்த்தால்தான் நான் சொல்வதிலுள்ள எதார்த்தம் புரியும்.

حَسْبُ ابْنِ آدَمَ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ
“ஆதமின் மகனுக்கு அவனின் முதுகு முள்ளை நிமிர்த்தும் அளவிலான ஒரு சில பிடிகள் போதும்” என்றார்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.

இந்த ஹதீதில் ஒரு நுட்பம் உண்டு. அநேகமானவர்கள் அதைத் தெரிந்து கொள்ளவில்லை. அது என்னவெனில் لقيمات என்ற சொல்லாகும். இச் சொல் لُقْمَةٌ என்ற சொல்லின் பன்மைச் சொல் அல்ல. இதற்கு பன்மைச் சொல் لُقَمٌ என்பதாகும். ஹதீதில் வந்துள்ள لُقَيْمَاتٌ என்ற சொல் لُقَيْمَةٌ என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். لُقْمَةٌ என்றால் ஒரு பிடி என்று பொருள். இச் சொல்லை تَصْغِيْرْ எடுத்தால் لُقَيْمَةٌ என்று வரும். இதற்கு சிறுபிடி என்று பொருள் வரும். இதே சொல்லின் பன்மைச் சொல்தான் لُقَيْمَاتٌ என்ற சொல்லாகும். இதற்கு “பல சிறு பிடிகள்” என்ற பொருள் வரும். இதன்படி ஹதீதின் விளக்கம் ஆதமின் மக்களுக்கு சிறு பிடிகள் பல போதும் என்பதாகும். முடிந்தவரை சாப்பாட்டின் அளவைக் குறைத்து நோன்பு நேரம் பசியை அனுபவித்தால் மட்டுமே நோன்பின் குறிக்கோள் நிறைவேறும்.

***************************

THE MAN WHO FASTS GETS TWO DELIGHT

لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ
صحيح مسلم 1151 – 164

Nabee (pbuh) has stated that the man who fasts gets two delight. This means, the man who fasts feels delight two times.

One. He feels delight at the time of breaking fast. Is this delight due to the spirituality or cheerfulness?

Nabee (pbuh) would not have lauded on the basis of cheerfulness. Because there is no chance at all to have lauded so whereas the holy Qur’aan is saying to act against the NAFS.

Allah has criticized about cheerfulness called NAFS in many circumstances in the Qur’aan. At one circumstance إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ “Nafs” is able to arouse the evils (12-53) at another circumstance قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا ‘the one who purified NAFS has won it and the one who polluted the NAFS has lost’ (91-9,10)

Nabee (pbuh) has said that أَعْدَى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ the NAFS between the two ribs is the arch-enemy out of your foes.

There is no opportunity to have lauded about NAFS wehereas Allah and Nabee (pbuh) have criticised the Nafs.

While the truthfulness is so, we can’t help laughing, listening the following explanations of some radio preachers who do not know the art of (علم التصوّف) SUFISM to defeat the Nafs.

Their explanation is as follows: “As the man who fasts is feeling so hungry, won’t he feel so delight seeing the multi tasted short-eats and soft drinks?
Listening their such explanation, we have to shy hoop for not able to answer to the questions of non -Muslims.

Nabee (pbuh) is the one who came to guide the people to righteous path abolishing the astray paths. Those who do THAHWA service without knowing Sufism should speak with prudence. Those who guide the people must have known the righteous path.
Those who are in charge for the Muslim service in radio and TV stations must see the qualifications and talents of the preachers before bringing them to the microphone.

Feeling or thinking the mercy of God for helping one without breaking that day’s fast due to the disease or some other reasons, he feels so delight. It is the real delight. Not like the delight said by the other THAYEES.

The second delight of the one who fasts is فرحة عند لقاء ربه the theophany of the Day after life.
Theophany is a delight not only for the one who fasts also for all those who like to meet the God. However, it will be a special meeting. It is a confirmed subject that Holy Qur,aan and hatheez are being the source for that the believers will see the God.
Though everyone will get the theophany of God in the Day after life, it won’t be same to everyone, will be different depending on the spiritual stage of everyone.

Fasting is the difficult and special one out of the worships. Being hungry is the special feature and specialty in this worship. Because one can get theosophy by being hungry.

It can say that there is no link between the fast of people nowadays and the ambition of fasting. Because one eats and drink more than he does in ordinary usual days. What I mean can be found only through the measuring.
حَسْبُ ابْنِ آدَمَ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ
Nabee (pbuh) said that only a few fist of food enough so as to raise his spinal chord.

There is a technique in this hathees. That is the wordلقيمات This word is not plural of the word لُقْمَةٌ . Plural of this word is لُقَمٌ. The word that has come in the hatheesلُقَيْمَاتٌ is the plural of the word لُقَيْمَةٌ. لُقْمَةٌ means A FIST. Ifتَصْغِيْرْ is taken to it will become لُقَيْمَةٌ. This means small fist. لُقَيْمَاتٌ is the plural of this word. That means many small fists. According to this, the meaning will be “Many small fists of food enough to son of Adam. If only be hungry reducing the food as possible, one can attain the ambition of fasting.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments