Thursday, April 25, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்

பள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்

றமழான் மாத இரவுகளில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில் “தறாவீஹ்” தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்கு “நோன்பின் நிய்யத்” சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள்.

பள்ளிவாயலில் இரவு 10 மணிக்கு நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு வீடு சென்றவர்கள் “ஸஹர்” முடியும் வரை – “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரும் வரை சாப்பிடாமலும், குடிக்காமலும் இருக்க வேண்டுமா? அல்லது சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் தடை ஒன்றுமில்லையா? (சாப்பிடுவதாலும், குடிப்பதாலும் நோன்பு வீணாகிவிடுமா இல்லையா?)
நோன்பு நோற்கும் ஒருவன் அதற்கான “நிய்யத்” வைத்துக் கொள்வது கடமை என்பதில் மாற்றமில்லை. அந்த “நிய்யத்” வைத்துக் கொள்வதற்கான நேரம் இரவு மட்டும்தான். அதாவது “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் முதல் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரை – இடைப்பட்ட எந்த நேரத்திலும் – “நிய்யத்” வைத்துக் கொள்ளலாம். ஆனால் நிய்யத் வைத்த பின் சாப்பிடுவதோ, குடிப்பதோ கூடாது என்பது “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்தேயாகும். ஒருவன் பள்ளி வாயலில் “நிய்யத்” வைத்துக் கொண்டாலும் கூட “ஸுப்ஹ்” நேரம் வரும் வரை அவன் சாப்பிடுவதாலோ, குடிப்பதாலோ நோன்புக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படமாட்டாது. அவன் அன்றிரவு “ஸஹர்” செய்தாலும் செய்யா விட்டாலும் ஏற்கனவே பள்ளிவாயலில் வைத்துக் கொண்ட “நிய்யத்”திற்கு எந்தப் பங்கமும் இல்லை. அதேபோல் அவன் அன்றிரவு “ஸஹர்” செய்த பின் மீண்டும் “நிய்யத்” வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஒருவன் பள்ளிவாயலில் நோன்பிற்கான “நிய்யத்” வைத்த பின் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வருவதற்கு முன் மனைவியுடன் உடலுறவு கொள்ளலாமா? அவ்வாறு கொள்வதால் ஏற்கனவே வைத்த “நிய்யத்”திற்கு பங்கம் ஏற்படுமா? மீண்டும் அவன் “நிய்யத்” வைக்க வேண்டுமா?
பொதுவாக விளங்க வேண்டியது என்ன வெனில் நோன்பிற்கான “நிய்யத்” “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்து “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரும் வரை – இரண்டுக்கும் இடைப்பட்ட எந்த நேரத்திலும் “நிய்யத்” வைத்துக் கொள்ளலாம் -. உண்ணுதல், பருகுதல் கூடாதென்பதோ, அல்லது நோன்பை முறிக்கக் கூடிய எந்த ஒரு காரியமும் செய்யக் கூடாதென்பதோ “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்தேயாகும். இரு தொழுகைக்கும் இடைப்பட்ட எந்த நேரத்திலும் நோன்பை முறிக்கக் கூடிய எதையும் செய்யலாம். நோன்பிற்கோ, ஏற்கனவே வைத்த நிய்யத்திற்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை.
தொலைக்காட்சிப் பெட்டியில் – TVயில் – நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டு நோன்பிற்கான “நிய்யத்”
வைத்தால் அது நிறை வேறுமா? 
ஆம். அது “ஷரீஆ” வின் படி நிறை வேறும்.
எனினும் அது விரும்பத்தக்கதல்ல. ஆயினும் “தஸவ்வுப்” ஸூபிஸ வழி செல்வோரிடம் இத்தகைய “நிய்யத்” நிறைவேறாது.
நோன்பிற்கான “நிய்யத்”
வைக்கும்போது “வுழூ” உடன்
இருக்க வேண்டுமா?
இல்லை. அவசியமில்லை.
“வுழூ” இல்லா விட்டாலும் “நிய்யத்” நிறை வேறும். எனினும்
“வுழூ” உடன் இருந்து கொண்டு “நிய்யத்” வைப்பது சிறந்ததேயாகும்.
“நிய்யத்” என்பதை அறபு மொழியில்தான்
சொல்ல வேண்டுமா? அல்லது எந்த மொழியிலும் சொல்லலாமா?
எந்த மொழியிலும் சொல்லலாம். அல்லது
எந்த மொழியிலும் மனதில் நினைக்கலாம். மனதில் நினைப்பதுதான் கடமையே
தவிர வாயால் மொழிதல் கடமை அல்ல. எந்த மொழியிலேனும் மொழிய முடிந்தவர்கள்
மொழிவதே சிறந்ததேயாகும்.  
அறபு மொழியில் “நிய்யத்”
نويت صوم غد عن
عداء فرض رمضان هذه السّنة لله تعالى
தமிழ் மொழியில் “நிய்யத்”
இந்த வருடத்து றமழான் மாதத்தின் பர்ழான
நோன்பை “அதாவாக” நாளைக்குப் பிடிக்க “நிய்யத்” செய்கிறேன்.

ஒருவன் மேற்கண்ட வசனங்களை வாயால் மொழியாமல்
குறித்த வசனங்கள் தருகின்ற கருத்தை மனதால் நினைத்துக் கொண்டாலும் போதும்.         
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments