Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பற்றிய சில துளிகள் !

ஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பற்றிய சில துளிகள் !

05.02.1944இல் ஆன்மீகப் பேரொளியாய் காத்தான்குடியில் அவதரித்தார்கள்.

இவர்களது தந்தை அல்ஹாஜ் அபுல்இர்பான் அப்துல்ஜவாத் (றஹ்) அவர்கள்
ஒரு பிரபல மார்க்க ஞானியாகவும் அற்புதங்கள் நிகழ்த்திய ஒரு “வலிய்யுல்
-லாஹ்” இறைநேசராகவும் திகழ்ந்தார்கள். இன்னார் தனது தவமைந்தர் மிஸ்பாஹீ அவர்கள் உலகில் தோன்றிய 05.02.1908இல் அதே திகதி மாதத்திலேயே உலகில் மலர்ந்து, 18.09.1978இல் தனது 70வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹ்)
தங்களது தந்தை போல் தாமும் ஒரு மார்க்க அறிஞராக ஆகவேண்டுமென்ற
வேட்கையால் தன் தந்தையிடம் பயின்ற பின்னர் காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, பாணந்துறை அல்மத்ரஸதுத் தீனிய்யா அறபுக்கலாபீடங்களில் கற்று பின்னர் இந்தியா, சவுதிஅரேபியா சென்றும் கல்வி பயின்றார்கள்.
இவர்கள் ‘அறபுமொழி, அறபு இலக்கியம், சொல்லிலக்கணம், மொழியிலக்கணம்,தப்ஸீர், ஹதீஸ், தர்க்கசாஸ்திரம், “பிக்ஹு”சட்டக்கலை, யாப்பிலக்கணம், அணியிலக்கணம்’ ஆகிய கலைகளிலும் குறிப்பாக “தஸவ்வுப்’’ “ஸூபிஸ’’ (மனிதனின் உளக்கறையை நீக்கி அவனை இறைவனிடம் சேர்த்து வைக்கும்)கலையில் சிறந்தோங்கினார்கள்.
இறைவன் தனக்கு வழங்கிய அறபுமொழி ஆற்றலை பயன்படுத்தி இஸ்லாமியமெய்ஞ்ஞானிகளான உலமாஉகளால் அறபு மொழியில் எழுதப்பட்ட
“புதூஹாத் அல்மக்கிய்யஹ்”
“புஸுஸுல் ஹிகம்”
“அல் இன்ஸானுல் காமில்”
“துஹ்பதுல் முர்ஸலஹ்”
“லவாமிஉல் பய்யினாத் பீஷர்ஹி அஸ்மாயில்லாஹி வஸ்ஸிபாத்”
“றூஹுல் பயான்”
“ஹிகம்”
“அல்ஹகீகஹ்” போன்ற இறைஞான ஸூபிஸ நூல்களைப் பார்த்து, ஆய்ந்தறிந்ததுடன் தமக்கேற்பட்ட ஐயங்களை இறைஞான குருக்களைத் தேடிச்சென்று கேட்டறிந்து அத்துறையில் ​தெளிந்தார்கள்.
பல அறபுக்கலாபீடங்களில் அதிபராகக் கடமையாற்றிய அன்னார் சில ஆண்டுகள் அரச பாடசாலைகளிலும் மௌலவீ ஆசிரியராகக் கடமையாற்றினார்கள். இறைஞான ஸூபிஸ துறையிலும் மார்க்க விடயங்கள் பற்றியும் தமிழ் மொழியில் 30க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்கள்.
அவர்கள் இறுதியாக எழுதிய “தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்” என்றநூல் அறபுத் தமிழ் விளக்கம் கொண்ட நூலாகும். இந்நூல் இமாம் பூசீரீ (றஹ்) அவர்கள் எழுதிய உலகப் பிரசித்திபெற்ற “புர்தஹ் ஷரீபஹ்” நூலுக்குரிய அறபு தமிழ் விரிவுரை நூலாகும். 
புர்தஹ் ஷரீபஹ்விற்கு 300 “ஷர்ஹ்” விரிவுரை நூல்கள் எழுதப்படுள்ளதென்பது அறிஞர்களின் கருத்தாகும். “தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில்புர்தஹ்” என்ற அறிஞர், அஷ்ஷெய்குல் காமில் மிஸ்பாஹி அவர்களின் விரிவுரை நூல் 301வது நூலாகும். அவர்கள் எழுத்துத் துறையில் சிறந்தோங்கியது போல் பேச்சுத் துறையிலும் வல்லமை படைத்திருந்தார்கள். 
இலங்கையில் அவர்களுக்கு ‘ஈழத்தின் சொற்கொண்டல்’ என்று பட்டம் வழங்கப்பட்டது போல் “ஷம்சுல் உலமா (மார்க்க அறிஞர்களின் சூரியன்) என்று இந்திய உலமாஉகளாலும் இந்தியாவில் வைத்து பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 
“அவர்கள் 500க்கு மேற்பட்ட ஒலி,ஒளிநாடாக்கள் பேசிள்ளார்கள் அவைகளை நாடெங்கும் பிற நாடுகளிலும் மக்கள் கேட்டும் பார்த்தும்வருகின்றனர்
அவர்கள் “தஸவ்வுப்” எனும் இஸ்லாமிய ஸூபிஸக் கொள்கையை தரீகத், ஹகீகத், மஃரிபத் அடிப்படையில் பேசுவதுடன் “ஷரீஅத்” சட்டங்களையும் தெளிவுபடுத்தி வருகின்றார்கள். 
காத்தான்குடியில் பள்ளிவாயலில் மார்க்கத்திற்காக தன்னை 35வருடங்களாகஅர்ப்பணித்தவர் இவர்கள் தவிர யாருள்ளார்?
குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் ஆகிய மூலாதாரங்களைப் பின்பற்றி அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்பவர்.
நபிமார்களையும் வலீமார்களையும் அவர்களின் அகமியங்களையும் எடுத்தோதுபவர், கந்தூரிகள் கொடுப்பவர், நினைவு தினங்களை உயிர்ப்பிப்பவர்.
இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்று அரசவர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்ட ‘அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்வலிய்யுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு’(Incorporated by Act Parliament No 46 of 2009) நிதியத்தின் மாண்புமிகு தவிசாளரும் இவர்களேயாவர். இவர்களின் அதிகாரத்திலேயே இந்நிதியம் தங்கியுள்ளது.
இலங்கை அரசின் அகில இலங்கை சமாதான நீதவான் பதவியில் இருப்பவர்.
2009இல் அகில இலங்கை சமாதான மன்றத்தால் கலாநிதி, சாமசிறீ பட்டம் பெற்றவர். பகையையும் பகைவர்களையும் நுண்மை அறிவாலும் அன்பாலும் வென்றவர்.
1994ல் காத்தான்குடி பிரதேச சபைத்தேர்தலில் தராசு சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். 
அவர்களுக்கெதிராக கிளர்ந்த கிளர்ச்சிகளை அகிம்சையால் வெற்றி கண்டவர். 
உண்மை நேர்மை சத்தியப் பாதையில் சென்று 33 வருடங்களாக தற்சொற்கேட்டு நடக்கும் பெருங்கூட்டத்தையே தன் கையில் வைத்திருப்பவர்.
பள்ளிவாயலுக்காகவும் ஸ்தாபனங்களுக்காகவும் காணிகளையும் சொத்துக்களையும்​ தேடி பத்ரிய்யஹ் பள்ளிவாயலை நவீன வடிவில் கட்டிக்கொண்டிருப்பவர்.
மார்க்கத்திற்காகவும் சமூகத்திற்காகவும் தன்னை முழுமையாக அற்பணித்த இறை நேசர்.
ஆத்மீகத்தின் மூலம் மக்கள் நெஞ்சக் ​கறையினை துடைத்து இறைவனிடம் சேர்த்து வைக்கும் பணியில் வாழ்பவர்.
தம்மை எதிர் நோக்கிய யுத்தங்களையும் கஷ்டங்களையும் அகிம்சையாலும் பொறுமை மன்னிப்பாலும் அடக்கியவர்.
காத்தான்குடியில் காதிரிய்யஹ் திருச்சபையை நிறுவி அதில் முரீதீன்களை உறுப்பினராக்கிக் கொண்டவர்.
காதிரிய்யஹ் தரீக்கா ஷெய்கு ஆக ‘‘பைஅத்” கொடுப்பவர். இவர்களது முரீதீன்கள் இலங்கையிலும் பிற நாடுகளிலும் உள்ளனர்.
தற்பொழுது அவர்கள் வயது 68 ஆகும்.
2007ல் நடந்த ஆயுததாரிகளின் கொலை முயற்சியிலிருந்து அதிசயமாகக் காப்பாற்றப்பட்டு வலிய்யுல்லாஹ் என பொது மக்களால் அழைக்கப்பட்டு உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானக்கடல்.
தகவல்
மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments