Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ்வின் வுஜூத் ஒன்றே ஒன்றுதான்

அல்லாஹ்வின் வுஜூத் ஒன்றே ஒன்றுதான்

ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ

قال الشّيخ محمّد بن
فضل الله فى كتابه “التفحة المرسلة”
وإنّ ذلك الوجود –
وجود الله تعالى  – واحد، لا تعدّد فيه قطعا،
والألباس هي صورالّتي إحتجب بها ذلك الوجود عن نظر الأغيار، وظهر فيها لأهل
الأسرار، مختلفة لإختلاف أجناسها وأنواعها وهيآتها وأشكالها، ومتعدّدة لموجب
إختلاف اللازم منه التعدّد، فاتعدّد فى الوجود حينئذ إنّما هو من حيث المظاهر لامن
حيث الظاهر كقول الشاعر.

 وماالوجه إلّا واحد غير أنّه      إذا انت أعددت المرايا تعدّدا

يعني أنّ اَلباس
المخلوقات أي صورها الّتي ظهر بها ذلك الوجود علما لصور الأعيان الثّابثة،
وعينا لصور الأعيان الخارجة الرّوحيّة والمثاليّة
والجسميّة والإنسانيّة مختلفة ومتعدّدة، وإنّ ذلك الوجود حقيقة جميع الموجودات
الكونيّة الّتي حقائقها وبواطنها التّعيّنات العلميّة فى المرتبة الواحديّة إلى آخر ما قال.

சுருக்கம் :
அல்லாஹ்வின் “வுஜூத்” ஒன்றே ஒன்றுதான். அது இரண்டுமல்ல. பலதுமல்ல. அதில் எண்ணிக்கைக்கு இடமே இல்லை. அதன் உடைகள் பலதரப்பட்டவையாகும். அவைதான் வேறென்ற திரை போட்டுக் கொண்டவர்களுக்கு அவனைக் காட்டாமலும், அவ்லியாஉகளுக்கு அவனைக் காட்டியும் நிற்கின்றன.
பலது என்பதும், எண்ணிக்கை என்பதும் “மள்ஹர்” எனப்படும் 
பாத்திரங்களைக்
கவனிப்பது கொண்டேயன்றி அவற்றில் வெளியாகும் அந்த “வுஜூதை”க் கவனிப்பது கொண்டல்ல.
முகம் ஒன்றே ஒன்றுதான். ஆனால் நீ அதற்கு எதிரில் பல கண்ணாடிகளை வைத்தால் எதார்த்தத்தில் உள்ள ஒரு முகம் பல முகங்களாக தோற்றும். இதனால் முகம் பலதென்று கொள்ள முடியாது.
சிருட்டி – பிரபஞ்சம் – அந்த “வஜூத்” வெளியாகும் உடையாகும். அது – சிருட்டி – அவனின் அறிவில் “அஃயான் தாபிதா”வாக இருந்து பின்னர் “அஃயான் காரிஜா” வாக ஆயிற்று.
“மர்தபதுல் வாஹிதிய்யா” என்ற இடத்தில் அந்த “வுஜூத்” உள்ளமை அறிவு ரீதியான குறிப்புக்களாயிருந்தவைதான் சர்வ பிரபஞ்சங்களாகவும் வெளியாகித் தோற்றுகின்றன. ஆகையால் சகல சிருட்டிகளுக்கும் அந்த “வுஜூத்” ஒன்றே எதார்த்தமானதாகும்.  
நூல் – அத்துஹ்பதுல் முர்ஸலா
ஆசிரியர் – முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ்

குறிப்பு 
– “வஹ்ததுல்
வுஜூத்” ஞானத்தை அள்ளித்தரும் இந்நூல் எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா” வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஆதாரமாக எடுத்த நூல்களில் ஒன்றாகும். பரிதாபம் அந்தோ!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments