Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

ஆக்கம் : மௌலவீ பஹ்றுத்தீன்
ஸுஹ்தீ றப்பானீ
இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துக் காட்டுகிறோம் என்று பாமர மக்கள் மத்தியில் தங்களை அலங்கரித்து, இஸ்லாமியன் என்று உடை அணிந்து, இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் தங்களது குடியிருப்புக்களையும் அமைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேர் கொள்கைகளை சிதைக்க யூத, காபிர்களால் மறைமுகமாக நிறுவப்பட்ட கொள்கையே “வஹ்ஹாபிஸம்” என்ற ஓர் கொள்கையாகும். இதைப் பின்பற்றுவோரை “வஹ்ஹாபியர்கள்” என்று நாம் சொல்கின்றோம்.
இக்கொள்கை ஹிஜ்ரி 661ல் பிறந்த இப்னுதைமிய்யா என்பவனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் ஹிஜ்ரி 1111ல் பிறந்து தன்னை இஸ்லாமியன் எனக் காட்டிக் கொண்ட முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனால் வளர்க்கப்பட்டு பிரபல்யமாகத் தொடங்கியதனால் அந்த அயோக்கியனின் முழுப்பெயரில் உள்ள “வஹ்ஹாப்” என்ற பெயரை மையமாகக் வைத்துக் கொண்டு இக்கொள்கை “வஹ்ஹாபிஸம்” என்றும் இக் கொள்கையைப் பின்பற்றுவோர் “வஹ்ஹாபியர்கள்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இப்பெயர் இவர்களுக்குப் பொருத்தமானதா?
இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தை சீரழிக்கும் நற்பேறு அற்ற இந்த வேஷதாரிகளுக்கு “வஹ்ஹாபியர்கள்” என்று சொல்வது பொருத்தமற்றதாகும்.
ஏனெனில், “வஹ்ஹாப்” என்ற பெயர் அல்லாஹுத்தஆலாவின் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்களில் ஒன்றாகும். “வஹ்ஹாப்” என்றால் – அதிக அருள்வளம் உடையவன் என்று அர்த்தமாகும்.
எனவே, இக்கண்ணியம்
பொதிந்த புண்ணிய நாமத்தை அல்லாஹ்தஆலாவின் அருளிலிருந்து மிக தூரமான, ஏன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிய முர்தத், காபிர்களுக்கு பயன்படுத்துவது பொருத்தமற்றதாகும்.
எனவே, சுன்னத்
வல் ஜமாஅத்தினரான நாம் இப்பெயரை இவர்களுக்கு உபயோகிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தெரியாதவர்களுக்கும் இவ்விளக்கத்தை கூறி அவர்களையும் விழிப்படையச் செய்ய வேண்டும்.
பிறகு எப்பெயர் இவர்களுக்குப் பொருத்தமானது?
இவர்களுக்குப் பொருத்தமான ஏற்றமான பெயரை 1400 வருடங்களுக்கு முன்பதாகவே உயிரிலும் மேலான கண்மனி நாயகம் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் சூட்டியிருக்கிறார்கள். அப் பெயர் கொண்டு இவர்களை அழைப்பது நபிவழியாகும்.
அப்பெயர் என்னவெனில்
1037 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ
بْنُ الحَسَنِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ،
قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا:
وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا»
قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «هُنَاكَ الزَّلاَزِلُ وَالفِتَنُ،
وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ»

அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவர்கள் அறிவிக்கறார்கள். நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு
அலைஹி வசல்லம் ஒரு
முறை “யா அல்லாஹ் எங்கள் ஷாம் தேசத்தில் எங்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக!
இன்னும் எங்கள் யமன் தேசத்திலும் சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக!”
எனப் பிராத்தனை செய்தார்கள். அப்போது அங்கிருந்த
மக்களில் சிலர் அல்லாஹ்வுடைய ரசூலே! எங்கள் “நஜ்த்” பகுதியிலும் சுபீட்சத்தை ஏற்பட வேண்டி பிராத்தனை
புரியுங்கள் என்று கேட்க அவர்களின் சொல்லை செவியேற்காதது போன்று நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள்
மீண்டும், “யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்தில் எங்களுக்கு
சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக! இன்னும் எங்கள் யமன் தேசத்திலும்
சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்றே பிராத்தித்தார்கள்.
மீண்டும் அங்கிருந்த மக்கள் அல்லாஹ்வுடைய
ரசூலே! எங்கள் “நஜ்த்” பகுதியிலும்
சுபீட்சம் ஏற்படவேண்டி பிராத்தனை செய்யுங்களேன் என்று கேட்டனர். அப்போது நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள்  – அந்த “நஜ்த்”
என்ற பிரதேசத்தில்தான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்.
அங்குதான் ஷைதானுடைய கொம்பு உதயமாகும் என்று கூறினார்கள்.
நூல் – ஸஹீஹுல் புஹாரி
ஹதீஸ் எண் – 1037
இந்த ஹதீதில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நஜ்த் என்ற இடத்தில் “ஷைதானுடைய
கொம்பு” உதயமாகும் என்று முன்னறிவிப்பாகக் கூறியது முஹம்மத் இப்னு
அப்தில் வஹ்ஹாபையேயாகும் என்று அதிகமான அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளார்கள்.
ஏனெனில், முஹம்மத்
இப்னு அப்தில் வஹ்ஹாப் நஜ்த் என்ற இடத்தில் பிறந்து அங்கேயே இஸ்லாத்திற்கு எதிரான தன்
நச்சுக்கருத்துக்களை பரப்பியவன் ஆவான்.
மேலும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீதில் வழிகேடர்களின் தந்தையான முஹம்மத் இப்னு அப்தில்
வஹ்ஹாபை “ஷைதானின் கொம்பு” என வர்ணித்து கூறியதற்கிணங்க
அவனின் அடிவருடிகளையும் “ஷைதானின் கொம்புகள்” என்று அழைக்கப்படுவதே சரியானதும் சிறந்ததுமாகும்.
அறபியில் சொல்ல வேண்டுமாயின் قُرُوْنُ الشًّيْطَانِ “ஷைதானின்
கொம்புகள்” என்றும் வெறுமனே சொல்ல வேண்டுமாயின் قَرْنِيُّوْنَ “கர்னிகள்” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
ஹதீதில் “கொம்பு” என்ற சொல் இவர்களுக்கு பாவிக்கப்பட்டது
எதற்காக?
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் இக்கூட்டத்தினரைப் பற்றி குறிப்பாக “கொம்பு” என்ற சொல் கொண்டு குறிப்பிடக் காரணம் என்னவெனில் – கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இக் கூட்டத்தினரை மறைமுகமாக மிருகங்களுக்கு
ஒப்பாகக் கருதி கூறியள்ளார்கள். ஏனெனில் மிருகங்களுக்குத்தானே “கொம்புகள்” இருக்கின்றன.
எனவே அன்புக்குரியவர்களே!
உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்! சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள்! அசத்தியத்தை தவிடு பொடியாக்க கை கோருங்கள்! அல்லாஹ் தஆலா உங்கள் மீது ஈருலகிலும் அவனது அருள் மழை எனும் அடைமழையைக் கொட்டச் செய்வானாக!
ஆமின் யாரப்பல் ஆலமீன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments