Thursday, April 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உள்ளமை ஒன்று

உள்ளமை ஒன்று

– மௌலவீ  KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) –
வஹ்த்ததுல் வுஜூத் –
உள்ளமை ஒன்று  அல்லாஹ் மாத்திமே
இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்ளமை அற்றது என்பதை​
மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள்.
அல்லாஹ் தஆலாவின் தன்மைகள், திருநாமங்கள்
அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும்
மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே
படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான
நம்பிக்கை.
அவ்வாறாயின் அல்குர்ஆனில்
அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
{وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ [الحديد: 4

நீங்கள்
எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)

என்று கூறுகின்றான்.

இந்த வசனத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுடன் “உடன் இருத்தல்” எனும் தன்மை
அல்லாஹ்வுக்கு புதிதாக ஏற்பட்ட ஒரு தன்மையாக இருக்க முடியாது. அது அல்லாஹ்வின்
பூர்வீகமான தன்மையாகவே இருக்கவேண்டும். படைப்புகளை படைத்தபின் அவைகளுடன் அல்லாஹ்
இருப்பது பற்றி பிரச்சினை இல்லை. படைப்புகளை படைக்க முன், படைப்புகளே இல்லாதபோது
அவைகளுடன் அல்லாஹ் இருப்பது எவ்வாறு? என்பதை சிந்திய்யுங்கள்.
படைப்புகளை படைக்க முன்
அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன. அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம்
இருக்கவில்லை அந்தநேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன. படைப்புகளைப் படைத்தபின்
அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை.
அல்லாஹ் அவற்றை விட்டு  பிரியவுமில்லை.
எப்போதும் “நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்”அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக
இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச் சமீபமாக
இருக்கின்றான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments